/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளி தொடர் விடுமுறை பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ADDED : அக் 18, 2025 01:23 AM
ஈரோடு, தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதேசமயம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர்.
அதன்படி ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று காலை முதலே மக்களின் வருகை அதிகரிக்க ஆரம்பித்தது. முன்பதிவு செய்தவர்கள் அவர்களுக்கான பெட்டிகளில் உள்ள இருக்கைக்கு சென்று அமர்ந்தனர். அதேசமயம் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க பயணிகள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பயணிகளை வரிசைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக பட்டாசு போன்ற வெடிப்பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்பது குறித்து ரயில்வே போலீசார் சோதனை செய்தனர்.
இதேபோல் ஈரோடு பஸ் ஸ்டாண்டிலும் கூட்டம் குவிந்தது. வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக மாலை முதல் நள்ளிரவு வரை மக்களின் வருகை அதிகரித்தது. அனைத்து மாவட்ட பஸ்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. குறிப்பாக மதுரை, நெல்லை, நாகர்கோவில் போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் பயணிகளால் நிரம்பி வெளியேறியது.
அதேசமயம் மாலை நேரம் முதல் விட்டு விட்டு பெய்த மழையால், பயணிகள் கொஞ்சம் சிரமப்பட நேரிட்டது.