/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை துவக்கம்
/
ஈரோடு கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை துவக்கம்
ADDED : செப் 18, 2025 01:36 AM
ஈரோடு : ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனையை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு, 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய வடிவமைப்பில் பட்டு, பருத்தி சேலைகள், போர்வை, படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு, படுக்கை விரிப்புகள், ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு உள்ளன.
ஈரோடு கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை, 1.55 கோடி ரூபாய், கோபி விற்பனை நிலையத்தில், 45 லட்சம் ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் ஜெகநாதன், மேலாளர் மோகன்குமார், விற்பனை நிலைய மேலாளர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.