/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டெக்ஸ்வேலியில் தீபாவளி விற்பனை தொடக்கம்
/
டெக்ஸ்வேலியில் தீபாவளி விற்பனை தொடக்கம்
ADDED : அக் 03, 2025 01:23 AM
ஈரோடு, ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி, ஜவுளி விற்பனையின் ஒருங்கிணைந்த வளாகமாக உள்ளது. இங்கு தினசரி, வாராந்திர சந்தை இயங்கி வருகின்றன. முன்னணி ஜவுளி உற்பத்தியாளர், பெரிய நிறுவனங்களின் நேரடி கடைகள் உள்ளன. 500 கடைகள் இயங்கும் ஒரே வளாகமாகும். இங்கு தீபாவளி விற்பனை கொண்டாட்டம் 'இந்த தீபாவளி தங்க தீபாவளி' என்ற பெயரில் தொடங்கியது.
டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி, துணைத்தலைவர் தேவராஜன், நிர்வாக இயக்குனர் ராஜசேகர் வழிகாட்டுதலுடன், டெக்ஸ்வேலி செயல் இயக்குனர் குமார் விற்பனை திருவிழாவை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இங்கு ஏற்கனவே உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கடைகளில் புதிய ரக ஆடை ரகங்கள் குவிக்கப்பட்டு உள்ளன. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. ஆண், பெண், சிறுவர், சிறுமிகள் அனைவருக்கும் தேவையான அனைத்து முன்னணி கம்பெனிகளின் ரெடிமேட் ஆடைகள், ஜவுளி ரகங்கள், பட்டுச் சேலைகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆடைகளை மலிவு விலை வரம்பில் சென்று வாங்குவதற்கு டெக்ஸ்வேலி ஒரு நல்ல இடமாகும். அக்., 1 முதல் தேதி தீபாவளி வரை இங்கு ஆடை வாங்கும் அனைவரும், இங்கு நடைபெறும் ஸ்லோகன் போட்டியில் கலந்து கொண்டு, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தங்க காயின் பரிசு வழங்கப்படுகிறது.
அக்., 3ம் தேதி முதல் 6ம் தேதி தேதி வரை வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை கண்காட்சி, நுாற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன் பிரம்மாண்ட முறையில் நடக்கவுள்ளது. பொழுதுபோக்கு அம்சமாக குழந்தைகள் விளையாடி மகிழ பேண்டஸி வேர்ல்ட் அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகள் கொண்ட கண்காட்சி மற்றும் ராட்டினம், ரோலர்காஸ்ட் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுக்களும் உள்ளது. இவ்வாறு கூறினார்.