/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு
/
ஈரோடு கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ADDED : நவ 01, 2024 01:21 AM
ஈரோடு கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ஈரோடு, நவ. 1-
தீபாவளியை முன்னிட்டு, ஈரோட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஈரோடு, கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் உள்ள அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்துாரி அரங்கநாதர் சேவை சாதித்தார். ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு பூஜை செய்யப்பட்டன.
பெரிய மாரியம்மன் உற்சவர், மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள் பாலித்தார். சோழீஸ்வரர் கோவில், திண்டல் வேலாயுத சுவாமி கோவில், வ.உ.சி., ஆஞ்சநேயர் கோவில், கொங்காலம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
* சென்னிமலை, முருகன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகப்பெருமான் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் வள்ளி, தெய்வானை சன்னதியிலும் வழிபாடு நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். அதிகாலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். பொதுமக்கள் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில், கோவில் பஸ்கள் இயக்கப்பட்டது. மலை கோவில் தார் சாலை பணி நடைபெறுவதால், கோவில் பஸ் மட்டும் அனுமதிக்கப்பட்டது. படிகள் வழியாக ஏராளமானேர் நடந்து சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். வட மாநிலத்தவர் அதிகளவில் குடும்பத்துடன் வந்து முருகனை வழிபட்டு சென்றனர்.
* அந்தியூர், சிங்கார வீதி அருகே உள்ள அங்காளம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், செல்லீஸ்வரர் கோவில், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரியம்மன் கோவில்களில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
*காங்கேயம் அருகேயுள்ள, சிவன்மலை முருகன் கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முதலில் கோமாதா பூஜை நடந்தது. பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவன்மலை முருகரான சுப்ரமணியசாமியும், வள்ளி, தெய்வாளையும் சிறப்பு அலங்காரத்தில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தீபாவளி என்பதால் சிவன்மலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.