/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமி படத்தை சித்தரித்த தி.மு.க., நிர்வாகி மகன் கைது
/
சிறுமி படத்தை சித்தரித்த தி.மு.க., நிர்வாகி மகன் கைது
சிறுமி படத்தை சித்தரித்த தி.மு.க., நிர்வாகி மகன் கைது
சிறுமி படத்தை சித்தரித்த தி.மு.க., நிர்வாகி மகன் கைது
ADDED : பிப் 21, 2025 01:59 AM
பெருந்துறை:சிறுமி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஆபாசமாக வெளியிட்ட தி.மு.க., நிர்வாகி மகன், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த ஈங்கூர், செங்குளத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்; தி.மு.க., கிளை அவைத்தலைவர். இவரது மகன் சுரேந்தர், 24; கோவை தனியார் மில்லில் குவாலிட்டி இன்ஜினியராக உள்ளார். பெருந்துறையை சேர்ந்த, 15 வயது சிறுமியின் போட்டோவை மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர், பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து சுரேந்தரை கைது செய்து, கோபியில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.