/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
ADDED : அக் 09, 2024 12:51 AM
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
ஈரோடு, அக். 9-
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து ஈரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். ராயல் தியேட்டர் முதல் மேட்டூர் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மீனாட்சிசுந்தரனார் சாலை, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு சாலை போன்ற இடங்களில் அ.தி.மு.க.,வினர் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்றனர்.
தமிழகத்தில் கடந்த, 40 மாதங்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாததால், கடுமையாக உயர்ந்துள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, நில மதிப்புக்கான பதிவு கட்டணம் உயர்வு என கடுமையான வரி, கட்டண உயர்வை மக்கள் சந்திக்கின்றனர்.
சாதாரண மக்களால் வாழவே முடியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பிற வரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும், என வலியுறுத்தி பதாகைகளை வைத்திருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பகுதி செயலாளர் கேசவமூர்த்தி, முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றவர்களை உற்சாகப்படுத்தும்படி, மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மைக்கில் பேசியபடி நடந்து சென்றார்.
சூரியம்பாளையம் பகுதியில் பகுதி செயலாளர் பழனிசாமி தலைமையிலும், பெரியார் நகர் பகுதியில் பகுதி செயலாளர் மனோகரன் தலைமையிலும், சூரம்பட்டி பகுதியில் பகுதி செயலாளர் ஜெகதீசன் தலைமையிலும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* டி.என்.பாளையத்தில் அண்ணாதுரை சிலை முன், அந்தியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ரமணிதரன் தலைமையில், டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* ஈரோடு அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், கோபி சீதா கல்யாண மண்டபம் முதல், கச்சேரிமேடு வரை நேற்று நடந்த, மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்துக்கு, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
* பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையில் சத்தி பஸ் ஸ்டாண்ட் அருகிலும், அரியப்பம்பாளையம் பேரூராட்சி கோபி ரோட்டிலும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், அரியப்பம்பாளையம் கழக செயலாளர் தேவமுத்து, மாவட்ட பிரதிநிதி சோழா சேகர், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* புன்செய்புளியம்பட்டியில், பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையில் பஸ் ஸ்டாண்ட் முன் போராட்டம் நடந்தது.
பஸ் ஸ்டாண்ட் முன்பு தொடங்கிய மனித சங்கிலி, கோவை சாலை, நகராட்சி அலுவலகம் வரை நீண்டது. நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட விவசாய அணி நிர்வாகி சோமசுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானாவில், நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் மோகன்குமார், யூனியன் சேர்மேன், வளர்மதி தேவராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* பவானி அருகே ஜம்பையில், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
* சென்னிமலை ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில், பேரூராட்சி அலுவலகம் முன் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.