/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'எஸ்.ஐ.ஆர்., திட்டத்தின் நோக்கத்தை முறியடிப்போம்' ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., கூட்டணியினர் ஆவேசம்

ADDED : நவ 12, 2025 12:56 AM
ஈரோடு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடத்தும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து, 'இண்டி' கூட்டணி சார்பில், ஈரோட்டில் காளை மாட்டு சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம் தலைமை வகித்து பேசியதாவது:
எஸ்.ஐ.ஆர்., திருத்தத்தை கைவிட தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் 'இண்டி' கூட்டணி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இத்திருத்தம் 'இண்டி' கூட்டணிக்கு எதிராக அமையும் என்பதற்காக போராடவில்லை. வாக்களிக்கும் கடமை, உரிமையை பறித்து விடக்கூடாது என்பதற்காக எதிர்க்கிறோம். இவ்வாறு பேசினார்.
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், ''ஒரு ஆண்டு காலம் வாக்காளர் பட்டியல் தயார் செய்வதை, 30 நாளில் அவசர, அவசரமாக தயார் செய்ய தேர்தல் ஆணையம், பா.ஜ., கைத்தடியாக செயல்படுகிறது. அவர்களுக்கு வாக்களிக்காத ஏழைகள், பட்டியல் இனத்தவர், வாடகை வீடுகளில் வசிப்போர் ஓட்டுக்களை நீக்கம் செய்ய திட்டமிட்டு இப்பணி நடத்தப்படுகிறது.
இதை எதிர்த்து தி.மு.க., கூட்டணி தொடுத்துள்ள வழக்குக்கு எதிராக, எஸ்.ஐ.ஆரை, செயல்படுத்த அ.தி.மு.க., மனுத்தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் தடை விதிக்கும். அல்லது எந்த நோக்கத்துக்காக இத்திருத்தம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முறியடிக்கப்படும்,'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், மத்திய மாவட்ட செயலர் வெங்கடாசலம், அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.