sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'பெண்களுக்கு பாதுகாப்பில்லை என இ.பி.எஸ்., கூறுவது மிகப்பெரிய தவறு'

/

'பெண்களுக்கு பாதுகாப்பில்லை என இ.பி.எஸ்., கூறுவது மிகப்பெரிய தவறு'

'பெண்களுக்கு பாதுகாப்பில்லை என இ.பி.எஸ்., கூறுவது மிகப்பெரிய தவறு'

'பெண்களுக்கு பாதுகாப்பில்லை என இ.பி.எஸ்., கூறுவது மிகப்பெரிய தவறு'


ADDED : நவ 11, 2025 06:49 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ''பெண்களுக்கு பாதுகாப்பில்லை என, இ.பி.எஸ்., கூறுவது மிகப்பெரிய தவறு,'' என, வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.அன்புச்சோலை திட்டத்தை ஈரோட்டில் நேற்று தொடங்கி வைத்த அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக எப்.எல்.2 எனப்படும், தனியார் மது பார் அதிகளவில் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டு-கின்றனர். ஆனால் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே இதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அனுமதி கேட்கும் அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உரிய ஆய்வு நடத்தி குறிப்பிட்ட விண்ணப்பத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இவ்வகை பார்களுக்கு நிறைய கட்-டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையும், மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ள பார்களை இடம் மாற்றம் அல்லது அகற்ற ஏற்பாடு செய்-துள்ளோம். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில். 12 சதவீதம் மட்டுமே ஆய்வில் உள்ளது. மற்ற அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்-பட்டுள்ளன. மத்திய அரசின் ஒப்புதலுக்காக, 37 திட்டங்களை அனுப்பியுள்ளோம். மேற்கு மண்டலத்தில் பெண்களுக்கு பாது-காப்பில்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வேறு வழியில்லாமல் குற்றம்சாட்டுகிறார். எங்கோ ஒரு சிறு தவறு நடப்பதை வைத்து இப்படி சொல்வது, அவர் செய்யும் மிகப்பெரிய தவறு. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.






      Dinamalar
      Follow us