/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லக்காபுரம் தொழிலாளி சாவில் மர்மம்: தி.கோடு விவசாயி மீது புகார்
/
லக்காபுரம் தொழிலாளி சாவில் மர்மம்: தி.கோடு விவசாயி மீது புகார்
லக்காபுரம் தொழிலாளி சாவில் மர்மம்: தி.கோடு விவசாயி மீது புகார்
லக்காபுரம் தொழிலாளி சாவில் மர்மம்: தி.கோடு விவசாயி மீது புகார்
ADDED : நவ 11, 2025 06:41 AM
ஈரோடு: ஈரோட்டை அடுத்த லக்காபுரம், கரட்டாங்காட்டை சேர்ந்தவர் முருகேசன், 47, கூலி தொழிலாளி. நாமக்கல் மாவட்டம் திருச்-செங்கோடு, விட்டம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி தோட்-டத்தில் கூலி வேலை செய்தார். முன் பணமாக, 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாததால் கரட்டாங்காட்டிற்கு அக்டோபரில் முருகேசன் வந்துள்ளார். ஒரு மாதமாக பணிக்கு வராத நிலையில், உறவினர் கணபதி மற்றும் இருவருடன், கரட்டாங்காட்டிற்கு கந்தசாமி கடந்த, 8ல் வந்து, முருகேசனை வலுக்கட்டாயமாக வேலைக்கு அழைத்து சென்றுள்-ளனர்.
இந்நிலையில், 8ம் தேதி மாலை முருகேசன் மகன் அரவிந்தசா-மிக்கு போன் செய்த கந்தசாமி, தந்தையை அழைத்து செல் என்று கூறியுள்ளார். இதன்படி சென்றபோது, பாண்டு பேப்பரில் அர-விந்தசாமியிடம் கந்தசாமி கையெழுத்து பெற்றுள்ளார். இதைய-டுத்து தந்தையை அழைத்து சென்ற நிலையில், உடல் வலிப்ப-தாக கூறி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முரு-கேசன், 9ம் தேதி காலை இறந்தார். இந்நிலையில் முருகேசன் சாவில் மர்மம் உள்ளதாகவும், கொலை வழக்காக பதிவு செய்து கந்தசாமி, கணபதி உள்ளிட்டோரை கைது செய்யுமாறு, அரவிந்த-சாமி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அது-வரை உடலை பெற மாட்டோம் என்று கூறிய நிலையில், அரசு மருத்துவமனையில், நேற்று குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் சமாதானம் செய்து, முருகேசன் உடலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். பிரேத பரிசோதனையில் உடலில் காயங்கள் இருப்பதாக அறிக்கை வந்தால், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிந்து விசா-ரிக்க முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

