/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டளிக்க சைக்கிளில் வந்த த.மா.கா., வேட்பாளர்
/
ஓட்டளிக்க சைக்கிளில் வந்த த.மா.கா., வேட்பாளர்
ADDED : ஏப் 20, 2024 07:17 AM
-நிருபர் குழு-
ஈரோடு லோக்சபா தொகுதி த.மா.கா., வேட்பாளர் விஜயகுமார், பவானி அருகே மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார்.* திருப்பூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம், பெருந்துறை டவுன் பஞ்., பெரிய வேட்டுவபாளையம் ஓட்டு சாவடியில் வாக்களித்தார். பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், அவரது மனைவி, பொன்முடி ஓட்டுச்சாவடியில் வாக்களித்தனர்.* அம்மாபேட்டை அருகே காடப்பநல்லுார் பஞ்., ஊராட்சி சேவை மைய ஓட்டுச்சாவடியில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், தனது மனைவி சரஸ்வதியுடன் வந்து ஓட்டளித்தார். அவர் கூறுகையில், லோக்சபா தேர்தலுக்காக முதல் முறையாக சொந்த கிராமத்தில் ஓட்டளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.விபத்தில் காயம்பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி ஊராட்சி, வாவிகடையை சேர்ந்த பெருமாள் மனைவி செல்லம்மாள், 55; திருவாச்சி அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று ஓட்டளித்து விட்டு, சாலையை கடந்து சென்றார். அப்போது மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை தொடர்ந்து அப்பகுதியில் சாலையின் இருபுறமும், போலீசார் பேரிகார்டு வைத்தனர்.

