/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கு மிரட்டல் தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து உண்ணாவிரதம்
/
வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கு மிரட்டல் தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து உண்ணாவிரதம்
வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கு மிரட்டல் தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து உண்ணாவிரதம்
வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கு மிரட்டல் தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து உண்ணாவிரதம்
ADDED : ஜூன் 22, 2024 02:39 AM
பவானிசாகர்:பவானிசாகர்
அணை நீர்த்தேக்க பகுதியில், விவசாய பயன்பாட்டுக்காக இலவசமாக
வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு, தமிழக அரசு அனுமதி
வழங்கியுள்ளது. இதன்படி கடந்த, 2ம் தேதி முதல் வண்டல் மண் அள்ளும் பணி
நடந்து வருகிறது.
மண் அள்ளி வாகனங்களில் லோடு செய்ய, ஹிட்டாச்சி
வாகனங்களுக்கு ஒரு லோடுக்கு, 350 ரூபாய் கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களுக்கு சொந்தமான வாகனங்களை
பயன்படுத்த வேண்டும். அதற்கு கட்டணமாக, 650 ரூபாய் செலுத்த தி.மு.க.,
நிர்வாகிகள் நிர்ப்பந்தம் செய்தனர்.
தங்களின் வாகனத்தை
நிராகரித்து, வண்டல் மண் அள்ளிச்செல்லும் விவசாயிகளின் வாகனத்தை
தடுத்தும், பல்வேறு இடையூறுகளையும் தி.மு.க.,வினர் ஏற்படுத்தினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்,
பவானிசாகர் நீர்வளத்துறை அலுவலகம் முன், நேற்று மதியம் உண்ணாவிரத
போராட்டத்தை தொடங்கினர். இதில், 40-க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர். பவானிசாகர் போலீசார் மற்றும் நீர்வளத்துறை, வருவாய் துறை
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:பவானிசாகர்
ஒன்றிய கவுன்சிலரான தி.மு.க.,வை சேர்ந்த சவுந்தரராஜன் மற்றும்
தி.மு.க., நிர்வாகிகள், தங்களுக்கு சொந்தமான பொக்லைன் வாகனங்களை
மண் எடுக்க பயன்படுத்த நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதை ஏற்காத
விவசாயிகளின் வண்டல் மண் எடுத்து செல்லும் வாகனங்களை, தடுத்து
நிறுத்தி சவுந்தரராஜன் மிரட்டுகிறார். வண்டல் மண் அள்ளுவதில்,
அரசியல் தலையீட்டை தடுத்து, விவசாயிகள் பாதுகாப்பாக மண் எடுத்து
செல்வதை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு
கூறினர்.
'முறையான அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்துக் கொள்ள
விவசாயிகளுக்கு தடையில்லை. மண் எடுத்து செல்லும் லாரிகளை தடுத்து
நிறுத்தி மிரட்டியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என
அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் மாலை, 4:௦௦ மணியளவில்
போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.