/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொண்டர்களை கேட்டே கூட்டணி தே.மு.தி.க., பொது செயலாளர் உறுதி
/
தொண்டர்களை கேட்டே கூட்டணி தே.மு.தி.க., பொது செயலாளர் உறுதி
தொண்டர்களை கேட்டே கூட்டணி தே.மு.தி.க., பொது செயலாளர் உறுதி
தொண்டர்களை கேட்டே கூட்டணி தே.மு.தி.க., பொது செயலாளர் உறுதி
ADDED : டிச 02, 2025 02:52 AM
பெருந்துறை, தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா, பெருந்துறை சிப்காட் பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீரை, நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
சிப்காட்டில் இயங்கி வரும் ஜவுளி இரும்பு மற்றும் பீங்கான் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலை கழிவுநீர், சுத்திகரிப்பில்லாமல் நல்லா ஓடையில் கலந்து நிலத்தடி நீரை மாசடைய வைத்துள்ளது. ஆனால் மாசுபட்ட தண்ணீரை டேங்கர் லாரிகளில் கொண்டு சென்று சுத்திகரிப்பதாக மக்களை ஏமாற்றுகின்றனர்.
இங்கு நிலத்தடி நீர் மட்டுமின்றி, காற்றும் பெரிதும் மாசுபட்டு உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக, இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தே.மு.தி.க.,வை பொறுத்தவரை, 2026 ஜன.,9ம் தேதி மாநாடு நடத்தி, அதில் தொண்டர்களின் கருத்தை கேட்டே, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.