sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தி.மு.க., அரசு பா.ஜ., தேசிய நிர்வாகி வானதி சாடல்

/

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தி.மு.க., அரசு பா.ஜ., தேசிய நிர்வாகி வானதி சாடல்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தி.மு.க., அரசு பா.ஜ., தேசிய நிர்வாகி வானதி சாடல்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தி.மு.க., அரசு பா.ஜ., தேசிய நிர்வாகி வானதி சாடல்


ADDED : ஜூன் 15, 2025 01:39 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு திண்டல் அருகே பா.ஜ., சார்பில், ஐம்பெரும் விழா நேற்று நடந்தது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, ஈரோடு மாவட்ட தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மோடி ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாது. தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஊழல் என, பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. கரூர் அமைச்சர் மீது குற்றஞ்சாட்டிய முதல்வர், அவருக்கு தியாகி பட்டம் கொடுப்பது தான் திராவிட மாடல் அரசு. முத்தலாக் சட்ட ஒழிப்பிற்கு பின் இஸ்லாமிய பெண்களுக்கு ஹீரோவாக மோடி இருக்கிறார்.

மோடியை எதிர்த்தால்தான் தி.மு.க.,வுக்கு அரசியல். அப்போது தான் தி.மு.க. செய்யும் ஊழல் தெரியாது என நினைத்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவை, 2047ல் வளர்ந்த நல்லரசாக மாற்ற பிரதமர் மோடி உழைக்கிறார்.

தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தங்களின் நிர்வாக தவறுகளை, ஊழல் குற்றச்சாட்டுகளை, சட்டம் ஒழுங்கு தோல்வியை மறைக்க, தமிழகத்துக்கு எதிராக பிரதமர் மோடி உள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்க நினைக்கின்றனர். இதில் சில சமயம் வெற்றியும் பெற்றுள்ளனர். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் மிக்க கூட்டணியாக மாறி கொண்டிருக்கிறது. இந்து மதத்துக்கு எதிராக தி.மு.க., அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. முருக பக்தர்கள் மாநாட்டை கேவலப்படுத்தும் விமர்சனங்களை தி.மு.க., அமைச்சர்கள் செய்கின்றனர். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்து மக்களை பார்க்கும் அரசாக தி.மு.க., உள்ளது. சட்டசபைக்குள் பா.ஜ., இரட்டை இலக்கத்துடன் செல்லும். தி.மு.க., அமைச்சர்களுக்கு ராஜா என்ற நினைப்பு உள்ளது. ஏழை, எளிய மக்களை பார்த்தால் ஏளனமாக பேசுவது வாடிக்கையாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இருப்பவர்களும் எங்களுடன் வர தயாராக உள்ளனர். இவ்வாறு வானதி கூறினார்.






      Dinamalar
      Follow us