/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., வழக்கறிஞரணி நிர்வாகிகள் ஆலோசனை
/
தி.மு.க., வழக்கறிஞரணி நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : மே 30, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் :திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க., வழக்கறிஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கேயத்தில் நடந்தது.
தி.மு.க., சட்டத்துறை செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். ௨026 சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசித்து, பல்வேறு அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, மனித வள மேலாண்மை
துறை அமைச்சர் கயல்விழி, ஈரோடு எம்.பி., பிரகாஷ், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாதன், மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.