ADDED : பிப் 17, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் திருப்பூர் லோக்சபா தொகுதி பொதுக்கூட்டம், பெருந்துறை அடுத்த சரளையில் இன்று நடக்கிறது.
இதுபற்றி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில் ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி திருப்பூர் லோக்சபா தொகுதி பொதுக்கூட்டம், பெருந்துறை அருகே சரளையில் இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு பேசுகிறார். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர உட்பட அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.