/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் முதல்வருக்கு தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு
/
பெருந்துறையில் முதல்வருக்கு தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு
பெருந்துறையில் முதல்வருக்கு தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு
பெருந்துறையில் முதல்வருக்கு தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு
ADDED : நவ 26, 2025 01:30 AM
பெருந்துறை, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஈரோட்டுக்கு நேற்றிரவு வந்தார். முன்னதாக கோவையில் இருந்து காரில் வந்த முதல்வருக்கு, ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் டோல்கேட் அருகில் தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெருந்துறை மற்றும் பவானி சட்டமன்ற தொகுதியினர், ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில், பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட அருகில் வரவேற்பு அளித்தனர். நிர்வாகிகள் வழங்கிய புத்தங்களை, வேனில் இருந்தபடியே முதல்வர் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பெருந்துறை புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை ரவுண்டானா, போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா, ஈரோடு ரோடு ஆகிய இடங்களில் வழிநெடுகிலும் கட்சியினர் மற்றும் மக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். இதில் பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, பால்சின்னசாமி, பெருந்துறை நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., தலைவர் செல்வம், க.செ.பாளையம் நகர செயலாளர் அகரம் மூர்த்தி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

