/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நவ., 3 முதல் தி.மு.க., பொதுக்கூட்டங்கள் அறி-விப்பு
/
நவ., 3 முதல் தி.மு.க., பொதுக்கூட்டங்கள் அறி-விப்பு
நவ., 3 முதல் தி.மு.க., பொதுக்கூட்டங்கள் அறி-விப்பு
நவ., 3 முதல் தி.மு.க., பொதுக்கூட்டங்கள் அறி-விப்பு
ADDED : அக் 31, 2024 06:18 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட தி.மு.க., செயலரும், வீட்டு வச-தித்துறை அமைச்சருமான முத்துசாமி வெளி-யிட்டுள்ள அறிக்கை:
புதிய இளம் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில், 'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில் தமிழகத்தில், 17,000 இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்கும் பேச்சு போட்டிகளை இளைஞர் அணி நடத்தியது. மாநில அளவில், 182 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதல் மூன்று இடங்களை நாமக்கல் மோகநிதி, செங்-கல்பட்டு சிவரஞ்சினி, தஞ்சை வியானி விஷ்வா ஆகியோர் பிடித்தனர். இச்சூழலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்டுள்-ளது.
இதில், இளம் பேச்சாளர்களை வைத்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்-படி நவ., 3ல் சூரியம்பாளையம் பகுதி ஆர்.என்.புதுார், அக்ரஹாரம், நவ., 6ல் கொடுமுடி ஒன்றியம், 8ல் வீரப்பன்சத்திரம் பகுதி என டிச., 15 வரை பல்வேறு பகுதிகளில் கூட்டம் நடத்த பட்-டியல் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியல் படி கூட்டம் நடத்துவதுடன், இளம் பேச்சாளர்களை பேச செய்ய வேண்டும். இக்கூட்டங்களில் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

