/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருணாநிதி நினைவு தினம் தி.மு.க., செயலாளர் அறிக்கை
/
கருணாநிதி நினைவு தினம் தி.மு.க., செயலாளர் அறிக்கை
ADDED : ஆக 05, 2025 01:19 AM
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முத்துசாமி விடுத்துள்ள அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏழாவது நினைவு தினம் நாளை மறுதினம் (7ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.
அன்று காலை, 7:00 மணிக்கு ப.செ.பார்க்கில் உள்ள கருணாநிதி சிலைக்கும், 7:30 மணிக்கு முனிசிபல் காலனியில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளோம். தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர, பகுதி, வார்டு, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்ட பகுதியில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்த வேண்டும். கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.