/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., பேச்சாளர் மளிகை கடை முன் பில்லி சூனிய பொம்மையால் பரபரப்பு

ADDED : டிச 06, 2025 02:56 AM
அந்தியூர்: தி.மு.க., பேச்சாளர் மளிகை கடை முன், மாந்திரீகம் செய்ததுபோல், கோலம் வரைந்து பில்லி சூனிய உருவ பொம்மை வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே, வட்டக்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 65; தி.மு.க., தலைமை பேச்சாளர். வட்டக்காட்டில் உள்ள ஓம் காளியம்மன் கோவில் முன் வசிக்கும் வீட்டை ஒட்டி, மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, கடையை திறக்க வந்தார். அப்போது, கடை வாசலில், மாந்திரீகம் செய்ததுபோல், கோலம் வரைந்து அதில் மஞ்சள், குங்குமம் துாவப்பட்டு, வைக்கோலால் செய்யப்பட்ட பில்லி சூனிய உருவ பொம்மையை ஆணியால் அடித்து வைகத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், அங்கு திரண்டனர். பில்லி சூனிய பொம்மையை அகற்ற பொதுமக்கள் பயந்த நிலையில், ஒரு வழியாக காலை, 11:00 மணிக்கு அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்-ஜெயமணி தம்பதியரின் வீட்டின் முன், மர்ம நபர்கள் பில்லி சூனிய உருவ பொம்மை வைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.