/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க.,வின் 200 தொகுதி கனவு பலிக்காது முன்னாள் அமைச்சர் செம்மலை ஆருடம்
/
தி.மு.க.,வின் 200 தொகுதி கனவு பலிக்காது முன்னாள் அமைச்சர் செம்மலை ஆருடம்
தி.மு.க.,வின் 200 தொகுதி கனவு பலிக்காது முன்னாள் அமைச்சர் செம்மலை ஆருடம்
தி.மு.க.,வின் 200 தொகுதி கனவு பலிக்காது முன்னாள் அமைச்சர் செம்மலை ஆருடம்
ADDED : டிச 24, 2024 08:02 AM
ஆத்துார்: ''தி.மு.க., கூட்டணி சட்டசபை தேர்தலுக்குள் சிதறி, சின்னாபின்-னமாகிவிடும். 200 தொகுதி கனவு தி.மு.க.,வுக்கு ஒருபோதும் பலிக்காது,'' என, ஆத்துாரில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார்.
சேலம் மாவட்டம், ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர், மருந்-துகள் இல்லாததை கண்டித்து நேற்று ஆத்துார் நகராட்சி அலுவ-லகம் எதிரே, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்-டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் செம்மலை பேசியதாவது:
தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், 200 தொகுதி கைப்பற்றுவதாக தீர்மானம் போட்டுள்ளனர். 2026ல், 20 தொகுதிகள் கூட தி.மு.க., வெற்றி பெறாது என்ற நிலையை உருவாக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். கூட்டணி பலத்தை நம்பியுள்ள, தி.மு.க., பணத்தை வைத்து ஓட்டு பெறலாம் என்ற கனவு ஒருபோதும் பலிக்காது. தி.மு.க., கூட்டணி, சட்டசபை தேர்தலுக்குள் சின்னா-பின்னமாக சிதறி விடும். அ.தி.மு.க., பெரிய கூட்டணியாக இருக்கும்.புதிதாக பொறுப்பேற்ற சேலம் அமைச்சர் ராஜேந்திரன், இடைப்-பாடியில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என்றார். இவர், 10 ஆண்டுகளாக கும்பகர்ணன் போல் துாக்கத்தில் இருந்தாரா? இடைப்பாடி, சேலம் மாநகரை சுற்றி பார்த்தால் என்ன திட்டம் என்பது தெரியும். தி.மு.க., தலைமையை திருப்திப்படுத்த அமைச்சர் ராஜேந்திரன் பொய் பேசுகிறார். கேரள மருத்துவ கழி-வுகள், தமிழகத்தில் கொட்டுவதை அரசு வேடிக்கை பார்த்து வரு-கிறது. நிர்வாகம் செய்ய தெரியாத ஆட்சியாக, தி.மு.க., உள்ளது.இவ்வாறு பேசினார்.எம்.எல்.ஏ.,க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாதேஸ்வரன், சின்னதம்பி, தலைவாசல் ஒன்-றிய குழு தலைவர் ராமசாமி, ஆத்துார் நகர செயலர் மோகன் உள்-பட பலர் கலந்துகொண்டனர்.