/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.10 கோடி நில அபகரிப்பு வழக்கில் போலி சான்றிதழ் தந்த டாக்டர் கைது
/
ரூ.10 கோடி நில அபகரிப்பு வழக்கில் போலி சான்றிதழ் தந்த டாக்டர் கைது
ரூ.10 கோடி நில அபகரிப்பு வழக்கில் போலி சான்றிதழ் தந்த டாக்டர் கைது
ரூ.10 கோடி நில அபகரிப்பு வழக்கில் போலி சான்றிதழ் தந்த டாக்டர் கைது
ADDED : ஜூன் 21, 2024 07:41 AM
ஈரோடு: ஈரோடு, செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி, 45த கடந்த, 2023ல் ஈரோடு கவுண்டச்சிபாளையத்தை சேர்ந்த சண்முக ராமசாமியிடம், 72, மூன்று கோடி ரூபாய் கடன் பெற்றார்.
இதற்கு ஈடாக 9 ஏக்கர் 66 சென்ட் மற்றும் 95 சென்ட் நிலத்தை சண்முக ராமசாமிக்கு கிரயம் மற்றும் வெள்ளோடு கனகபுரத்தை சேர்ந்த சிவசம்புவுக்கு பொது அதிகாரம் அளித்தார்.ஆனால், 95 சென்ட் நிலத்தை சிவசம்புவின் மனைவி நாகேஸ்வரி, சண்முக ராமசாமி பெயரில் கிரயம் செய்துள்ளனர். இதில் 30 சென்ட் நிலத்தை சக்தி கணேஷ், சண்முக ராமசாமி மகன் யோக மூர்த்தி பெயரில் கிரயம் செய்யப்பட்டுள்ளது.தன்னிடம் தெரிவிக்காமல் போலியாக டாக்டர் மூலம் வாழ்நாள் சான்றிதழ் தயாரித்து, 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை கிரயம் செய்து கொண்டதாக, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில், ரத்தினசாமி புகாரளித்து இருந்தார்.இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, சண்முக ராமசாமி, சிவ சம்பு, நாகேஸ்வரி, சக்தி கணேஷ், யோக மூர்த்தி, அவல் பூந்துறையை சேர்ந்த பத்திர எழுத்தர் சங்கர நாராயணன் உள்ளிட்ட எட்டு பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சண்முக ராமசாமி, சிவ சம்பு, சங்கர நாராயணனை கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் போலி வாழ்நாள் சான்றிதழ் வழங்கிய, கோபி, பங்களாபுதுார் சாலை, செங்காட்டு தோட்டத்தை சேர்ந்த டாக்டர் பால சுப்பிரமணியம், 75. என்பவரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் ஈரோடு, கொல்லம்பாளையத்தில், சக்தி கிளினிக் நடத்தி வருகிறார்.