ADDED : ஆக 29, 2026 06:52 AM
கோபி:கோபி சார்-பதிவாளர் அலுவலகத்தில், வழிகாட்டி மதிப்பீடு நகல் புத்தகம் களவு போனது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கோபி
கடைவீதியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில், கொளப்பலுார்
கிராமத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு நகல் புத்தகம்
பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு
முன், ஆவணங்களை சரிபார்க்க தேடியபோது, வழிகாட்டி மதிப்பீடு
பதிவேட்டின் நகல் புத்தகம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் அதன் அலுவலக பணியாளர்கள், அங்கிருந்த, 'சிசிடிவி'
கேமரா பதிவை பார்வையிட்டனர். அப்போது கடந்த, 26ம் தேதி அதிகாலை, 3:15
மணிக்கு பதிவான பதிவில், அலுவலக ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர்,
வழிகாட்டி மதிப்பீடு பதிவேட்டின் நகல் புத்தகத்தை மட்டும் களவாடி
செல்லும் சம்பவம் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து,
சார்-பதிவாளர் அலுவலக தரப்பில் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார்
விசாரிக்கின்றனர்.
