ADDED : ஆக 29, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:திருச்சி
மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் அப்துல்ரகுமான், 49. இவர் கடந்த மாதம்
கஞ்சா விற்றதாக, ஈரோடு டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்பில்
சிறையில் அடைக்க எஸ்.பி., கிரண் ஸ்ருதி பரிந்துரைத்தார். கலெக்டர்
கந்தசாமி உத்தரவின்படி, அப்துல்ரகுமானை குண்டர் தடுப்பில் கைது
செய்த ஈரோடு டவுன் போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
