ADDED : ஜன 20, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே தாசரிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவர் தோட்டத்தில் நேற்று முன்தினம் மதியம், நான்கு ஆடுகள் மர்மமான முறையில், கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தன.
சிறுத்தையாக இருக்கலாம் என்று, அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. இந்நிலையில் சத்தி வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து, மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர். கேமரா பதிவுகளை நேற்று ஆய்வு செய்தனர். இதில் ஆடுகளை கடித்து குதறியது, தெருநாய்களே என்பது தெரிய வந்துள்ளதாக, வனத்துறையினர் கூறியுள்ளனர்.