/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.ஐ.ஆரில் சந்தேகமா? தொலைபேசி எண் வெளியீடு
/
எஸ்.ஐ.ஆரில் சந்தேகமா? தொலைபேசி எண் வெளியீடு
ADDED : நவ 16, 2025 01:38 AM
ஈரோடு;வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்த கூட்டம் ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் எட்டு தொகுதிகளை சேர்ந்த, 8 வாக்காளர் பதிவு அலுவலர், 44 உதவி வாக்காளர் பதிவு அலுவலர், 420 கூடுதல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர் பங்கேற்றனர். கணக்கெடுப்பு படிவங்கள் குறித்த அனைத்து பணிகளையும் வரும் டிச.,4க்குள் நிறைவேற்ற வேண்டும்.
தகுதியான வாக்காளர், பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்கள், புகார்களை விளக்கம் பெற, தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டன. இதன்படி மாவட்ட இலவச தொடர்பு மையம்-1950, மாவட்ட உதவி மைய எண்-90425 80535, ஈரோடு கிழக்கு தொகுதி-0424 2252618, ஈரோடு மேற்கு - 0424 2254224, மொடக்குறிச்சி - 0424 22500123, பெருந்துறை - 0429 220577, பவானி - 04256 230334, அந்தியூர் - 04256 260100, கோபி - 04285 222043, பவானிசாகர் - 04295 220383 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

