தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வரைவாளர் சங்க கூட்டம்

வரைவாளர் சங்க கூட்டம்

வரைவாளர் சங்க கூட்டம்


ADDED : ஜூன் 29, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழ்நாடு வரைவாளர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம், மாநில தலைவர் முருகன் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாநில பொது செயலாளர் சிவராமன், மத்திய சங்கம் மற்றும் கிளை சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீர்வளத்துறை, பொதுப்பணித்துறையில் இரு ஆண்டுக்கும் மேலாக காலியாக உள்ள, 108 இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்கள் மற்றும் 3 முதுநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு பணிகள் தொய்வின்றி நடக்க உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப்பொறியாளர் அலுவலகத்தில் வரைதொழில் அலுவலர் பதவியினை பெற்று தர வேண்டும். நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கம், மாநில நில, நிலத்தடி நீர் வள மையம் மற்றும் மேல் பாலாறு வடிநில வட்ட அலுவலகத்தில் தலைமை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை பெறுதல், பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 4 மண்டலங்களிலும் தலா ஒரு மின் வட்ட அலுவலகத்தை உருவாக்கி, அங்கு தலைமை வரைதொழில் அலுவலர் (மின்) தலைமையில் இயங்கும் வரைவு பிரிவையும், மண்டல தலைமைப்பொறியாளர் அலுவலகங்களில் தலா ஒரு சிறப்பு நிலை வரைதொழில் அலுவலர் (மின்) பதவியையும் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us