ADDED : ஜூன் 29, 2026 05:33 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:தேசிய
போலியோ சொட்டு மருந்து தினத்தையொட்டி, ஈரோடு மாநகராட்சி சார்பில்,
நேற்று நடந்த முகாமை, கைத்தறி, துணிநுால் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்
விஜய் பாலாஜி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.
மாநகராட்சியில், 189 நிரந்தர சொட்டு மையங்கள் உட்பட மாவட்டம்
முழுவதும், 1,385 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்லாமல் பஸ் ஸ்டாண்ட், ரயில்
நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் மையம் மூலம் சொட்டு
மருந்து வழங்கப்பட்டது.* கோபி பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை, 7:00
மணிக்கு, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் போலியோ சொட்டு மருந்து
முகாமை துவங்கி வைத்தார்.
