ADDED : ஜன 04, 2026 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பொங்கல் பண்டிகையை தி.மு.க., சார்பில் சமத்துவம் நிறைந்த திராவிட பொங்கலாக கொண்டாட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ஈரோட்டில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார். போட்டி, பொங்கல் நிகழ்ச்சியை எவ்வாறு நடத்த வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆலோசனையில் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாவட்ட துணை செயலர்கள் செந்தில்குமார், செல்லபொன்னி, சின்னையன், மாநகர செயலர் சுப்பிரமணியன், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

