/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை 7ல் துவக்கம்
/
சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை 7ல் துவக்கம்
ADDED : ஜன 04, 2026 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஊஞ்சலுாரில், சேஷாத்ரி சுவாமிகள், 97ம் ஆண்டு ஆராதனை விழா வரும், 7ல் தொடங்கி, 12ல் நிறைவு பெறுகிறது.
இதன்படி, 7ம் தேதி காலை, 5:30 மணிக்கு குழந்தையானந்த சுவாமிகளால் ஆராதனை துவங்குகிறது. 11ல் சுதர்சன ஹோமம்; 12ல் காலை 10:30 மணிக்கு ஆராதனை, மாலை சுவாமிகளின் ஆசி, இரவு, 8:00 மணிக்கு ஊர்வலம் நடக்கிறது. 7 முதல் 11 வரை தினமும் பல்வேறு பூஜை, சிறப்பு இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதையொட்டி, 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஊஞ்சலுார் ரயில்வே ஸ்டேஷனில், நான்கு ரயில்கள் தலா ஒரு நிமிடம் நின்று செல்ல, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

