/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குளம், குட்டைகளுக்கு தண்ணீர் எடுப்பு; பூர்வாங்க பணிகளை அமைச்சர் ஆய்வு

ADDED : அக் 30, 2024 06:26 AM
காங்கேயம்: காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலசமுத்திரம் புதுார் ஊராட்சி, கத்தாங்கண்ணி பாலசம்முத்தரம் புதுார் மற்றும் கணபதிபாளையம் கிராமங்களுக்கு, நொய்யல் ஆற்றின் அருகில் இருந்து குளம், குட்டைகளுக்கு தண்ணீர் எடுத்து வருவது தொடர்பான பூர்வாங்க பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சருடன் கலெக்டர் கிறிஸ்துராஜ், செயற்பொறியளார் (நீர்வள ஆதராத்துறை) திருமூர்த்தி, திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம், வெள்ளகோவில், ஒன்றிய, நகர தி.மு.க., செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.