/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீரிப்பள்ளம் ஓடையில் துார்வாரும் பணி துவக்கம்
/
கீரிப்பள்ளம் ஓடையில் துார்வாரும் பணி துவக்கம்
ADDED : நவ 04, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி,  கோபி நகராட்சி சார்பில், கீரிப்பள்ளம் ஓடை துார்வாரும் பணி, வண்டிப்பட்டை பகுதியில் நேற்று துவங்கியது.
நகராட்சி சேர்மன் நாகராஜ், கமிஷனர் மங்கையர்கரசன் அடங்கிய குழுவினர் பணியை துவக்கி வைத்தனர். ஓடை மத்தியிலும், இரு கரைகளிலும் செடி, கொடி மற்றும் சேறு - சகதியை, பொக்லைன் கொண்டு துார்வாரும் பணி நடக்கிறது. வண்டிப்பேட்டையில் துவங்கிய துார்வாரும் பணி, சாமிநாதபுரம், பஸ் ஸ்டாண்ட், மேட்டுவலவு, அம்மன் நகர் வரை, ௮ கி.மீ., தொலைவுக்கு நடக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

