தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் குழாயை சீரமைக்காமல் டிரம்கள் போட்டு வைத்த அவலம்

குடிநீர் குழாயை சீரமைக்காமல் டிரம்கள் போட்டு வைத்த அவலம்

குடிநீர் குழாயை சீரமைக்காமல் டிரம்கள் போட்டு வைத்த அவலம்


ADDED : ஆக 17, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு;ஈரோடு ஈ.வி.கே., சம்பத் ரோடு, சேலம், நாமக்கல் மார்க்க பஸ்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் மூலப்பட்டறை நால்ரோடு திரும்பும் இடத்துக்கு சற்று முன்பாக, குடிநீர் குழாய் சீரமைப்பு பணி நடந்தது. இதற்காக தோண்டிய குழியை முறையாக மூடாததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஈ.வி.கே., சம்பத் ரோட்டில் கனரக வாகனங்கள் ஒருவழிப்பாதையில் பயணிக்கின்றன. அதேநேரம் இருசக்கர வாகனங்கள் இருவழிப்பாதையாக பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இங்கு கடந்த பத்து நாட்களுக்கு முன் சாலையில் குழி தோண்டி குடிநீர் குழாய் சரிசெய்யும் பணி நடந்தது. அதன்பின் குழியை மூடாமல், காலி டிரம்களை குழிக்குள் போட்டு வைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us