ADDED : ஆக 17, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சுதந்திர
தினம், ஞாயிற்றுகிழமை என இரு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது.
இதனால் கல்லுாரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலகங்களில்
பணியாற்றுவோர் என பல்வேறு தரப்பினரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு
வந்தனர். நேற்றுடன் விடுமுறை நிறைவு பெற்ற நிலையில் கல்லுாரி மாணவ,
மாணவிகள், அலுவலர்கள் தங்கள் பணியிடங்களுக்கு புறப்பட்டனர்.
இதனால்
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நேற்று மாலை, 4:30 மணி முதல்
அலைமோதியது. கோவை, திருச்சி, நாமக்கல், சேலம் பஸ்களில் பயணிகள்
முண்டியடித்து ஏறினர்.
ரயிலில் இடம் கிடைக்காததால் பஸ்சை அதிகளவில் பயணிகள் நாடியதே பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகரித்ததற்கு காரணமானது.
