/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10 நாட்களுக்கும் மேலாக வீணாகும் குடிநீர் நெடுஞ்சாலை துறை-நகராட்சி மெத்தனம்

ADDED : நவ 19, 2025 01:48 AM
பு.புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியில், காவிலிபாளையம் சாலை விரிவாக்கப்பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடப்பதால், அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது.
இதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஓங்கார பிள்ளையார் கோவில், நம்பியூர் சாலை, பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை உள்ளிட்ட பல இடங்களில் குழாய் உடைந்து, 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டிய புன்செய் புளியம்பட்டி நகராட்சி அதிகாரிகளும் வேடிக்கை பார்ப்பதால், நகராட்சி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
சாலை விரிவாக்க பணிகளால் தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்படுகிறது. புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு ஏற்கனவே இரண்டு குடிநீர் திட்டங்கள் இருக்கும் நிலையில் தற்போது, 52.07 கோடி மதிப்பில் அம்ருத் 2.0 திட்டப்பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. ஆனாலும் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், நகராட்சி பகுதியில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இவ்வாறு கூறினர்.