sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் சாரல் மழை; மாவட்டத்தில் மிதமான மழை

/

மாநகரில் சாரல் மழை; மாவட்டத்தில் மிதமான மழை

மாநகரில் சாரல் மழை; மாவட்டத்தில் மிதமான மழை

மாநகரில் சாரல் மழை; மாவட்டத்தில் மிதமான மழை


ADDED : நவ 19, 2025 01:47 AM

Google News

ADDED : நவ 19, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகரில் கடந்த சில நாட்களாகவே வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதலே வானம் மந்தமாக இருந்தது. மதியம், ௩:௦௦ மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. அரை மணிநேரம் நீடித்து, 3:30 மணிக்கு நின்றது. அதன் பிறகு குளிர்காற்று வீசி இதமான சூழல் நிலவியதால், க்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

* அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான, ஊமாரெட்டியூர், ஆனந்தம்பாளையம், நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, பூதப்பாடி, பூனாட்சி, குறிச்சி பகுதிகளில் நேற்று மாலை, 6:00 மணிக்கு தொடங்கிய மழை, 6:30 மணி வரை பெய்தது.

* அந்தியூர் மற்றும் தவிட்டுப்பாளையம், புதுமேட்டூர், மைக்கேல்பாளையம், கூச்சிக்கல்லுார், ராசாங்குளம், வட்டக்காடு, வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட், எண்ணமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில், நேற்றிரவு, ௭:௦௦ மணி முதல், ௭:௩௦ மணி வரை மிதமான மழை பெய்தது.

* டி.என்.பாளையம் மற்றும் வாணிபுத்துார், புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று அதிகாலை சாரல் மழை பெய்தது. அதை தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு, 7:00 மணி முதல், 7:30 மணி வரை மிதமான மழை பெய்தது.

தாராபுரத்தில்...

* திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் நேற்று காலை முதலே வெயில் தாக்கமின்றி குளுமையான சூழல் நிலவியது. காலை, 11:00 மணியளவில் லேசான துாறல் மழை பெய்தது. பிறகு மதியம், 2:30 மணி முதல் மாலை, 5:00 மணி என, விட்டுவிட்டு மழை பெய்தது. இரவு, 7:00 மணிக்கும் துாரல் போட்டது. நாள் முழுவதும் மழை ஆக்கிரமித்ததால், மக்கள் ஆனந்தம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us