ADDED : மே 29, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் ஞானபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார், 55; ரயில்வே கூட்ஸ்ஷெட் லாரி டிரைவர். கூட்ஸ் ஷெட்டுக்கு நேற்று காலை லாரி ஓட்டி வந்தார். அப்போது திடீரென மயங்கி விட்டார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சுவரின் மீது மோதியது. அப்போது கதவை உடைந்து வெளியே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
