ADDED : மே 29, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், சூளை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த, ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கலைச்செல்வன், 22, என்பவரிடம் சோதனை செய்தனர்.
வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்ய, பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கலைச்செல்வனை கைது செய்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 3,000 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
