/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரி மீது லாரி மோதியவிபத்தில் டிரைவர் சாவு
/
லாரி மீது லாரி மோதியவிபத்தில் டிரைவர் சாவு
ADDED : ஏப் 26, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாவல்பட்டி, காட்டூரை சேர்ந்தவர் சதீஸ்குமார், 32, லாரி டிரைவர். வாழப்பாடியில் இருந்து கோவைக்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு கடந்த, 20ம் தேதி சென்றார். விஜயமங்கலம் சுங்கசாவடி அருகில் ரோட்டோரத்தில் நின்ற லாரியின் பின்னால், இவர் ஓட்டிச்சென்ற லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமார், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார்.