/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடும்போது டிரைவருக்கு மயக்கம் சாலையோர தடுப்பில் மோதிய பஸ்
/
ஓடும்போது டிரைவருக்கு மயக்கம் சாலையோர தடுப்பில் மோதிய பஸ்
ஓடும்போது டிரைவருக்கு மயக்கம் சாலையோர தடுப்பில் மோதிய பஸ்
ஓடும்போது டிரைவருக்கு மயக்கம் சாலையோர தடுப்பில் மோதிய பஸ்
ADDED : ஜூன் 23, 2025 05:13 AM
பு.புளியம்பட்டி: பண்ணாரியில் இருந்து, 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்-கொண்டு சத்தியமங்கலத்துக்கு, ஒரு அரசு டவுன் பஸ் நேற்று காலை சென்றது. ராஜன் நகர் பாலம் அருகே, வளைவில் சென்ற-போது டிரைவர் பிரகாசுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர தடுப்புகளின் மீது மோதி நின்றது. மயங்கிய நிலையிலும் டிரைவரின் சாமர்த்தி-யமே இதற்கு காரணம்.
அதேசமயம் மயக்கமடைந்த டிரைவரை, ராஜன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.