/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவி, மகள் மாயம் போலீசில் டிரைவர் புகார்
/
மனைவி, மகள் மாயம் போலீசில் டிரைவர் புகார்
ADDED : மே 25, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :ஈரோடு. வெட்டுக்காட்டு வலசு. கணபதி நகர் ஆறாவது வீதியை சேர்ந்தவர் குணசேகரன், 40; இவரது சொந்த ஊர் அந்தியூர் அருகே கொமராயனுார். லாரி டிரைவரான இவர், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வந்து செல்வார்.
இவர் மனைவி சங்கீதா, 36; தம்பதிக்கு, 16 வயதில் மகள், 18 வயதில் மகன் உள்ளனர். இந்நிலையில் சங்கீதாவுக்கு ஓராண்டுக்கு முன் சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. லோடு ஏற்றிக்கொண்டு வெளி மாநிலத்துக்கு குணசேகரன் சென்ற நிலையில், சங்கீதா மாயமாகி விட்டார். அவருடன் மகளும் சென்று விட்டார். ஊர் திரும்பிய குணசேகரன் அளித்த புகாரின்படி, இருவரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.