/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பர்கூர் மலையில் லாரி கவிழ்ந்து டிரைவர் காயம்
/
பர்கூர் மலையில் லாரி கவிழ்ந்து டிரைவர் காயம்
ADDED : டிச 22, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பர்கூர் மலையில் லாரி கவிழ்ந்து டிரைவர் காயம்
அந்தியூர், தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லுாரை சேர்ந்தவர் ரமேஷ், 40; லாரி டிரைவரான இவர், திருப்பூரிலிருந்து ஜிப்சம் போர்டு அட்டை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் சிமோகாவுக்கு, பர்கூர் மலைப்பாதை வழியாக சென்றார். அந்தியூர் - பர்கூர் சாலையில் சுண்டப்பூர் பிரிவு அருகில், நேற்று முன்தினம் இரவு லாரி சென்றது. அப்போது வளைவான பகுதியில் திரும்பியபோது, கட்டுப்பாட்டைஇழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ரமேஷை, அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.