ADDED : அக் 05, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே அம்மன்கோவில் பதியில் உள்ள கிணற்றில், 45 வயது மதிக்கத்தக்க
ஆண் சடலம் கிடப்பதாக, சிறுவலுார் போலீசார் மற்றும் கோபி தீயணைப்பு
நிலையத்துக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார்,
தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு, கோபி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அதே பகுதியை
சேர்ந்த, சுப்பிரமணி, 37, கார் ஆக்டிங் டிரைவர் என்பது தெரிந்தது.
திருமணமாகி மகன், மகள் உள்ளனர். கிணற்றுக்குள் சுப்பிரமணி தவறி
விழுந்ததில் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
