ADDED : ஆக 22, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:கோவையிலிருந்து
வாழைக்காய் ஏற்றிய ஒரு ஈச்சர் வேன் சத்தியமங்கலம் நேற்று முன்தினம்
இரவு சென்றது. நம்பியூரை சேர்ந்த ஜெகன், 22, ஓட்டினார். இதேபோல்
சத்தியில் இருந்து கோவைக்கு காய்கறிகள் ஏற்றிய ஒரு ஈச்சர் வேன்
புறப்பட்டது.
சத்தி புது வடவள்ளியை சேர்ந்த சதீஷ்குமார், 35,
ஓட்டினார். நள்ளிரவில் செண்பகபுதுாரில் இரு வேன்களும் நேருக்கு
நேராக மோதிக்கொண்டன. இதில் ஜெகன் சம்பவ இடத்தில் பலியானார். அவருடன்
வந்த நம்பியூரை சேர்ந்த நவீன், 22, படுகாயமடைந்தார். மற்றொரு வேன்
டிரைவர் சதீஷ்குமார், அவருடன் வந்த சிக்கரசம்பாளையம் பரமசிவம்,
30, ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
