ADDED : செப் 02, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கொல்லம்பாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார், 58,
லாரி டிரைவர். ஈரோடு பச்சபாளி தமிழ்நகரில் உள்ள பண்ணை தோட்டத்தில்,
46 புதுார் நொச்சிகாட்டு வலசை சேர்ந்த விவசாயி சஜிகுமாரின்
எருமை மேய்ந்தது. அதை செந்தில்குமார் பிடித்து கட்டி வைத்துள்ளார்.
அவர் வெளியே சென்ற நேரத்தில் சஜிகுமார் அவிழ்த்து வீட்டுக்கு அழைத்து
சென்று விட்டார். மேலும் செந்தில்குமார் வீட்டுக்கு சென்று தகராறு
செய்து, கண்ணாடி துண்டால் கழுத்து, கைகளில் கிழித்துள்ளார். ஈரோடு அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த செந்தில்குமாரின்
புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் சஜிகுமாரை கைது செய்தனர்.
