ADDED : செப் 02, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி 48;
பல்லகவுண்டன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து
வந்தார். இரு தினங்களுக்கு முன் இரவில் குடும்பத்தினருடன் வீட்டில்
துாங்கியபோது, இடது கால் சுண்டு விரலில் ஏதோ கடித்து விட்டதாக சத்தம்
போட்டுள்ளார். கணவர் காலை பார்த்த போது, ரத்தம் வந்த நிலையில் செல்வி
மயங்கி விழுந்து விட்டார்.
பவானி அரசு மருத்துவமனைக்கு மனைவியை
அழைத்து சென்றார். வீட்டுக்குள் கணவர் தேடியபோது கட்டிலின் அடியில்
கட்டுவிரியன் பாம்பு இருந்தது. தகவலின்படி சென்ற பவானி தீயணைப்பு
நிலைய வீரர்கள் பாம்பை பிடித்து சென்றனர். இதனிடையே மேல்
சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வி
இறந்து விட்டார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
