ADDED : ஜூலை 03, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
கண்ணப்பர் வீதியை சேர்ந்தவர் ரவி, 38; டிரைவராக வேலை பார்த்தார்.
வடக்குபேட்டையை சேர்ந்த மஞ்சுளாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவியை
பிரிந்து வாழ்ந்தார். இந்நிலையில் இரண்டாவதாக மீனாட்சி என்பவரை
ரவி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரவி
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் கதவை
உடைத்து பார்த்த போது ரவி மின்விசிறியில் துாக்கில் சடலமாக
தொங்கினார். சத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
