ADDED : நவ 15, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை
அருகே சானாத்திக்கல்மேட்டை சேர்ந்தவர் மோகன், 45; டெம்போ டிரைவர்.
மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் நேரிட்ட விபத்தில்
இடுப்பு பகுதியில் அடிபட்டதால் அடிக்கடி வலி வந்துள்ளது.
இந்நிலையில்
நேற்று முன்தினம் வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். பவானி
அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
