நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் இ.சி.ஜி., இயந்திரம் கோளாறு
நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் இ.சி.ஜி., இயந்திரம் கோளாறு
ADDED : நவ 14, 2026 06:41 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி, 36வது வார்டு ஆர்.கே.வி.ரோட்டில், அரசு நகர்ப்புற நலவாழ்வு மையம் கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது.
இங்கு காய்ச்சல், அவசர சிகிச்சை, குழந்தை பிறப்புக்கு பிறகு பராமரிப்பு, குழந்தை ஆரோக்கியம், தடுப்பூசி, தேசிய சுகாதார திட்டங்கள் என பல்வேறு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
மையத்தில் உள்ள இ.சி.ஜி., இயந்திரம் பழுதாகி ஓராண்டுக்கு மேலாகியும் சரி செய்யப்படாததால், இதய நோயாளிகள் வேறு மருத்துவமனையை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மையத்தில் போதிய தண்ணீர் வசதியும் இல்லை.
மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
