ADDED : நவ 14, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:பர்கூர்மலை
செக்போஸ்டில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது
கர்நாடக மாநிலத்திலிருந்து பைக்கில் வந்தவரிடம் சோதனை நடத்தினர்.
இதில் 180
மி.லி., கொண்ட, 100 பாக்கெட் கர்நாடக மது இருந்தது. நாமக்கல் மாவட்டம்
உடுப்பத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி குருநாதன், 55, என்பதும்,
பர்கூர் கீழ்தெருவில் வசிப்பதும் தெரிய வந்தது. போலீசார் குருநாதனை கைது
செய்தனர்.
