/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கார் ஸ்டாண்ட் விவகாரத்தில் டிரைவர்கள் - பேரூராட்சி மோதல்
/
கார் ஸ்டாண்ட் விவகாரத்தில் டிரைவர்கள் - பேரூராட்சி மோதல்
கார் ஸ்டாண்ட் விவகாரத்தில் டிரைவர்கள் - பேரூராட்சி மோதல்
கார் ஸ்டாண்ட் விவகாரத்தில் டிரைவர்கள் - பேரூராட்சி மோதல்
ADDED : ஏப் 26, 2025 01:16 AM
அந்தியூர்:அந்தியூர்-பர்கூர் ரோட்டில், 50 ஆண்டுகளுக்கு மேலாக கார் ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு கார் ஸ்டாண்ட் பின்புறம், ஐந்து கோடி மதிப்பில் வாரச்சந்தை கட்டடம், வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விட்ட நிலையில், ஜவுளி, டீ, ஐஸ்கிரீம், மருந்து உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
வணிக வளாகத்துக்கு முன், கார் ஸ்டாண்ட் இருப்பதால், வியாபாரம் பாதிப்பதாக, கடை ஏலம் எடுத்தவர்கள் தெரிவித்தனர். இதனால் கார்களை வேறிடத்தில் நிறுத்துமாறு, பேரூராட்சி தரப்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டது. இதில் ஏப்.,25க்குள் (நேற்று) அகற்ற கெடு விதிக்கப்பட்டது. இதன்படி பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் சதாசிவம் ஆகியோர் நேற்று வந்தனர்.
வணிக வளாகம் முன் நான்கு கார்களை மட்டும் நிறுத்திக் கொள்ளலாம். மற்ற கார்களை அகற்றுமாறும் கூறினர். அப்போது ஒன்று கூடிய டிரைவர்கள், 'எட்டு கார்களையும் நிறுத்துவோம்' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அந்தியூர் போலீசார் வந்தனர்.
ஏழு கார்களை நிறுத்த அனுமதிக்குமாறு டிரைவர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்காமல் செயல் அலுவலர், தலைவர் உள்ளிட்டோர் சென்று
விட்டனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் கூறியதாவது: வணிக வளாக கடை முன் கார்கள் நிறுத்தப்பட்டுள்ள இடம், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை. ஆனாலும் பேரூராட்சி சார்பில் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டோம்.
கார் உரிமையாளர்களோ வாழ்வாதாரம் பாதிக்கும் என்றதால், நான்கு கார்களை நிறுத்தி கொள்ள அனுமதித்தோம். அவர்களோ எட்டு கார்களை நிறுத்துவோம் என்கின்றனர். அப்படி நிறுத்தினால் சட்டப்படி கார்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி
யுள்ளோம். அதேசமயம் தவிட்டுப்பாளையம் பாலம் அருகில் செயல்படும் கறிக்கடைகள் அனைத்தும், வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு அடுத்த வாரம் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் கார்களை நிறுத்தி கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு கூறினார்.